கடவுளின் கருங்குதிரை

Space Balloon

சி. ஜெயபாரதன், கனடா

 

காலமே கடவுள் ஓட்டும்
கருங் குதிரை !
கண்ணுக்குத் தெரியா தோடும்
காலமே உயிர்  !
கடவுளின் நிறம் கறுப்பு !
உந்து விசை கறுப்பு !
ஓயாது ! சாயாது ! ஓடாமல்
மாயாது !
முற்காலம், பிற்காலம், தற்காலம்
பின்னிய
முக்காலக் குதிரை !
முன்னே பாயும் ! பின்னே பாயாது !
ஒருபோக்கில் செல்லும் !
பாதை மாறாது ! பயணம் கோணாது !
வேகம் மாறாது ! 
வளையாது !  சுற்றாது !  போனால் மீளாது !
திசை மாறாது !  திரும்பாது ! 
விசை மாறாது !
விண்வெளியில் பல்கோடி
ஒளிமந்தை இழுத்துச் செல்லும்
கருங்குதிரை !
காலத்தை நிறுத்தி வைக்கக்
கடவுளுக்கும்
முடிய வில்லை !
காலக் குதிரை கால் முறிந்தால்
ஞாலம் சுழலாது ! உயிரினம் வாழாது !
ஆதி முதல் தோன்றி
ஊதி உப்பிடும்
காலவெளிப் பலூனும் சப்பி
வேலி யற்றுப் போகும்
போலியாக !

++++++++++++++++++++

 

S. Jayabarathan [jayabarathans@gmail.com]  June 30, 2018 [R-3]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.