ஆத்மா எங்கே ?

image.png

ஆத்மா எங்கே ? 

சி. ஜெயபாரதன், கனடா

சிறு மூளை !


ஆத்மாவைத் தேடித் தேடி

மூளை வேர்த்துக் 

களைத்தது !

மண்டை ஓட்டின் மதிலைத் 

தாண்டி

அண்டக் கோள்களின் விளிம்பித் 

தாண்டி 

பிரபஞ்சக் காலவெளி

எல்லை

கடக்க முடியாமல்

தவழ்ந்து முடக்கம் ஆனது,

சிறு மூளை ! 

பெரு மூளை


தூங்கிக் கொண்டுள்ள 

பெரு மூளை,

தூண்டப் பட்டு எப்போது

ஆறறிவு 

ஏழாம் அறிவாய்ச்

சீராகுமோ,

எப்போது போதி மரம்

தேடிப் போய் 

தாடி வளர்ந்து, நரை உதிர்ந்து

வாடிப் பல்லாண்டு

தவமிருக்குமோ

அப்போது

ஓர் பெரு வெடிப்பு 

நேர்ந்து 

கீழ் வானம் சிவந்து

ஆத்மா

சிந்தையில் உதயமாகும்

ஞான ஒளியாய் !

ஆன்மச் சங்கிலியே இறையோடு இணையும்

மானிடத்துக்கு இரண்டாம்

தொப்பூழ்க் கொடி

++++++++++++++++