தாய் நாட்டு வாழ்த்து


வந்தே மாதரம் சொல்வீரா ?

சி. ஜெயபாரதன், கனடா


எந்தையும் தாயும் குலாவிய
இந்தத் தாய கத்தை
உன் தாயகமாக நீ
ஒப்புக் கொள்ள வில்லை !
உன் மூதாதையர்
உதிப்பகம் என்றாலும் !
ஒருதாய் மக்கள் நாமில்லை யென
நிரூபித்துக் காட்டினாய் !
பட்டொளி வீசும்
மூவர்ணக் கொடி வணங்கி
நாவிலே
வந்தே மாதரம் மந்திரச் சொல்
வரவில்லை !

இந்திய அடிமைகளை
விடுவித்த
முதல் சுதந்திர முழக்கம்
வந்தே மாதரம் !
விடுதலை பெற்ற மாந்தர்
மதத்துக்கு அடிமை !
அரிவாளும், சுத்தியும்
ஓங்கிடும்
உன் விருப்பக் கொடியில் !

என் தாய் வேறு
உன் தாய் வேறு
ஒரு நாட்டில் பிறந்த நமக்கு !
என் வாய் வேறு
உன் வாய் வேறு
ஒரு மொழி பேசும் நமக்கு !
என் நிழல் வேறு !
உன் நிழல் வேறு
ஒரு வீட்டில் சுற்றி வந்தாலும் !
இரு வாயிலும் ஒலிக்க வில்லை
ஒரு மந்திரக் குரல்  !

எதிர்த் திசையில் போகும் நாம்
இந்த யுகத்தில்
அன்னிய ராகச் சந்தித்தோம் !
பிணைத்தவை சில !
பிடித்தவை சில ! ஆயினும்
பிரித்தவை பல !
ஒரு தாய் மக்களும்
இரு தாய்ப் பிள்ளையாய்ப்
சண்டை யிட்டார் !
இரு தாய் மக்களை
இணைத்திட
இரும்புப் பாலம் ஒன்றில்லை !
பிரிந்து, பிரிந்து
அந்நியராய்ப் போனோம்
சொந்த நாட்டிலே !

காலங் காலமாய்
ஆலயங்கள் கொள்ளை போயின !
மோனச் சிலைகள்
மூக்கறுபட்டு முலை அறுபட்டு
மானம் இழந்தன !
ஆக்ராவிலே
ஆகாவென்று எழுந்தது
தாஜ்மஹால் !
கஜினிஸ்தான் ஆவதை நிறுத்தும்
ஆங்கிலக்
காலனி ஆட்சி !

புத்துயிர் பெற்றது பாரதம்
முக்கால் கண்டமாய் !
மொகஞ்ச தாரோ
முகவரி அழிந்தது !
ஹரப்பா வரலாறு
கரையான் தின்றது !
சிலுவையில் அடிக்கப் பட்டது
சிந்து நதி நாகரீகம் !
திருடு போனது
பிரமிட் கோபுரம்
அரணில் லாத பாரதத்தில்
பளிங்குக் கொலு வாக
வெளுத்து நிற்குது தாஜ்மகால் !

*******

[S. Jayabarathan (jayabarat@tnt21.com)  May 20, 2011] R-1

2 மறுமொழிகள் »

  1. 1
    Harris Kittle சொல்கிறார்:

    I’d have to set with you one this subject. Which is not something I typically do! I really like reading a post that will make people think. Also, thanks for allowing me to speak my mind!

  2. 2
    holda venail சொல்கிறார்:

    You completed a few good points there. I did a search on the subject and found the majority of folks will have the same opinion with your blog.


RSS Feed for this entry

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 82 other followers