சி. ஜெயபாரதன், கனடா பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதுகள் அற்றுப் போக, விதைகளும் பழுதாக ஹிரோஷிமா நகரைத் தாக்கி நரக மாக்கி நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு ! நாகசாகியும் நாச மாக்கப் பட்டது ! இப்போது தோன்றின புதுயுக நியூட்ரான் குண்டுகள் ! கதிரியக்கம் பொழியும் புழுதிக் குண்டுகள் ! அணு ஆயுத வெடிப்பில் புகை மண்டலம் சூழ்வெளியில் பரவிச் சூடேறும் பூகோளம் ! அல்லது பரிதி ஒளியை மறைத்து குளிர்ப் [...]
‘கவிதைகள்’ பகுப்புக்கான தொகுப்பு
பேரழிவுப் போராயுதம் !
ஆகஸ்ட் 15, 2010அக்கினிப் பூக்கள் !
பெப்ரவரி 25, 2010சி. ஜெயபாரதன், கனடா 1. படைப்போன் இல்லாது படைப்பே கிடையாது ! முட்டை முதலாய் இட்டதா ? கோழி முன்பே பிறந்ததா ஞானத் தங்கமே ? 2. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாம் ! நுனிப் புல் மேய்ந்து வனத்தை அறிவதோ ஞானத் தங்கமே ? 3. வந்த சண்டைக்கு நழுவு ! வராத சண்டைக்குத் தழுவு ! சண்டை வந்தாலும் முடிவில் சமாதானா மாய்க் கைகொடு ஞானத் தங்கமே ! 4. குருடனுக் [...]
தேய்பிறைக் கோலம் !
பெப்ரவரி 24, 2010சி. ஜெயபாரதன், கனடா அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில் முற்றுப் பெறா தேனாற்றில் முத்தெடுத்தோம் ! சுற்றி வந்தோம் சொர்க்கப் படகில் ! வசந்த காலம் ! வளர்பிறைக் கோலம் ! கட்டினோம் நீள் பாலம் கடல் அலை மீது ! எமக்குள் இருந்த ஒற்றுமை வேர்களைப் பற்றிக் கொண்டு பழங்கதை பேசினோம் ! பாடினோம் ! ஆடினோம் ! படமெடுத்து நெஞ்சில் சூடினோம் ! விடியும் வரை கனாக் கண்டோம் தோழி ! மண்ணில் கால் [...]
அணு, அகிலம், சக்தி !
பெப்ரவரி 23, 2010சி. ஜெயபாரதன், கனடா பிரபஞ்சப் பெரு வெடிப்பில் சிதறி பொரி உருண்டை ஒன்று பரமாணுக்களாகி, துணுக்காகி அணுவாகி, அணுவுக்குள் அணுவாகித் துண்டுக் கோள்கள் திரண்டு அண்டமாகி, அண்டத்தில் கண்டமாகித் கண்டத்தில் துண்டமாகிப் பிண்டமாகி, பிண்டத்தில் பின்னமாகிப் பிளந்து, பிளந்து தொடர்ப் பிளவில் பேரளவுச் சக்தி யாகித் சீராகிச் சேர்ந்து சின்னஞ் சிறு அணுக்கருக்கள் பிணைந்து, பிணைந்து பேரொளி யாகிப் பிரம்மாண்டப் பிழம்பாகி, பரிதியாகி, பரிதியின் பம்பரப் பந்துகளாகி, பாசபந்த ஈர்ப்பில் அணைத்து அம்மானை ஆடினாள் என் அன்னை [...]
சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது
பெப்ரவரி 23, 2010வைகைச் செல்வி வனம்பாடி, வானம்பாடி, வனராணி சி. ஜெயபாரதன், கனடா இது நமது பூமி! இது நமது வானம்! இது நமது நீர்வளம்! முப்பெரும் சூழ் வளத்தையும் துப்புரவு செய்வது, நமது பணி! இவ்விதம் பறைசாற்றித் தமிழகத்தின் செவியெல்லாம் இராப் பகலாய் முழக்கம் செய்து வருபவர், வைகைச் செல்வி. ஊழியப் பணிபுரியும் பெண்டிரை ஆணாதிக்கப் பரம்பரை பாலியல் சீண்டல்களால் பேரின்னல் கொடுத்து, மன வேதனை தரும் கொடுமைகளைப் பாரதக் கலாச்சாரக் கூட்டங்களில் முரசடித்து வருபவர், வைகைச் செல்வி. [...]
பூரண சுதந்திரம் ?
பெப்ரவரி 22, 2010சி. ஜெயபாரதன், கனடா பாரதம் பெற்றது பாருக்குள்ளே ஓரளவு சுதந்திரம் ! பூரண விடுதலை வேண்டிப் போராடினோம் ! பூமி இரண்டாய்ப் பிளந்தது ! பூகம்பம் நிற்காமல் மும்மூர்த்தி யானது பங்களா தேசமாய் ! கட்டுப்பாடுள்ள சுதந்திரம் கண்ணிய மானிடருக்கு ! கட்டவிழ்த் தோடும் சுதந்திரம், காட்டு மிராண்டிகளுக்கு ! கையில் இருப்பதைக் கவனமாய் வைத்துகொள் ! ராவணன் சீதையைத் தூக்கி ரதத்தில் போவான் ! கண்ணன் குளிக்கும் மாதர் புடவை களவாடு வான் ! பூரணச் [...]
பிரம்மனிடம் கேட்ட வரம்!
செப்டம்பர் 23, 2009சி. ஜெயபாரதன், கனடா பரிதியின் கதிர் அம்புகள் புகுந்திட அஞ்சும் திக்குத் தெரியாத காட்டில், என் ஆத்மாவின் பிரதி பிம்பத்தைத் தேடித் தேடி அலைந்தேன்! தொப்பென தோள் மேல் குதித்தமர்ந்தது, ஓர் குயில்! காவியக் குயில்! தாவிப் பிடித்து என் இதயக் கூண்டில் அடைத்தேன்! அப்பாவிப் பறவை ஆத்மாவின் இரட்டை யென எப்படி அறிவது ? சட்டெனக் கூண்டைத் திறந்தேன்! குயில் பாடிக் கொண்டே பறந்து போனது! கூடு விட்டுக் கூடு பாயும் குயில் பல நாள் [...]
கலைஞன் ! காதலன் ! கணவன் !
செப்டம்பர் 4, 2009சி. ஜெயபாரதன், கனடா உடலை மெழுகாக்கி உன்னை ஓவியமாய் உருவாக்கிச் சிற்பமாய்ச் செதுக்கி, ஒப்பனை செய்து உலகுக்குக் காட்டுபவன், கற்பனைக் கலைஞன் ! உள்ளத்தின் மேல் படையெடுத்து, வெள்ளைப் புறாவைத் தூதுவிட்டு, இதயத்தைத் துணைக்கோள் ஈர்ப்பில் சுற்றுபவன் ஈசல் காதலன் ! உரிமைச் சிறையி லிட்டு, உன்னை உயிருள்ள மட்டும் மூடி, உள்ளமற்ற உடலாய், உடமைப் பண்டமாய், உரிமைப் பிண்டமாய், பம்பரமாய், பசும் பொன்னாய்ப் பேணுவோன் அசுரக் கணவன் ! காதலனுக்கு வேட்கை உன் துடிப்பு ! [...]
பூரணச் சுதந்திரம் ?
ஆகஸ்ட் 14, 2009சி. ஜெயபாரதன், கனடா பாரதம் பெற்றது பாருக்குள்ளே ஓரளவு சுதந்திரம் ! பூரண விடுதலை வேண்டிப் போராடினோம் ! பூமி இரண்டாய்ப் பிளந்தது ! பூகம்பம் நிற்காமல் மும்மூர்த்தி யானது பங்களா தேசமாய் ! கட்டுப்பாடுள்ள சுதந்திரம் கண்ணிய மானிடருக்கு ! கட்டவிழ்த் தோடும் சுதந்திரம், காட்டு மிராண்டிகளுக்கு ! ராவணன் சீதையைத் தூக்கி ரதத்தில் போவான் ! கண்ணன் குளிக்கும் மாதர் புடவை களவாடு வான் ! பூரணச் சுதந்திரம் ஒரு போர்க்களம் ! பட்டப் [...]
ஓ காப்டன் ! என் காப்டன் !
மே 9, 2009மூலம் : வால்ட் விட்மன் (1819-1892) (புல்லின் இலைகள்) தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா ஓ காப்டன் ! என் காப்டன் ! ஓய்ந்தது நம் பயங்கரப் பயணம் ! கப்பல் தளங்கள் தப்பின சூறாவளியை ! தேடிய வெகுமதி கிடைத்தது நமக்கு ! அருகில் துறைமுகம், ஆலய மணி ஓசை ! வெற்றி கொண்டா டுவர் மக்கள் எல்லாம் ! ஓ நெஞ்சே ! நெஞ்சே ! நெஞ்சே ! ஓடுது செந்நிற இரத்தத் [...]