தமிழில் முதல் அணுசக்தி நூல்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

அன்புள்ள நண்பர்களே,

“அணுசக்தி” என்னும் எனது இரண்டாம் நூலைத் தமிழினி பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன். கடந்த ஆறு ஆண்டுகளாக [2000-2006] திண்ணை வலை இதழில் வண்ணப் படங்களுடன் வந்த 41 கட்டுரைகள் அதில் தொகுக்கப் பட்டுள்ளன. 1964 இல் வெளிவந்த “ஆக்க வினைகளுக்கு அணுசக்தி” என்னும் எனது முதல் நூல் சென்னை பல்கலைக் கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது.

“யுத்தம் என்பது அழிவியல் விஞ்ஞானம்”, என்றோர் அறிஞர் கூறிச் சென்றுள்ளார். இரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த 1940 ஆண்டுகளில் ஐரோப்பிய, அமெரிக்க விஞ்ஞானிகளால் படைக்கப் பட்டப் பேரழிவு அசுர ஆயுதமே அணுப்பிளவு அணுகுண்டும் [Fission Bomb], அதற்குப் பின்னால் ஆக்கப்பட்ட அணுப்பிணைவு ஹைடிரஜன் குண்டும் [Fusion Bomb]. பேரழிவுப் போராயுதங்கள் விரிவாகி அவற்றின் பெருக்கமே தற்போது போருக்குக் காரணமாகி உலக நாடுகளைப் பயமுறுத்தி அமைதியைக் கொந்தளிக்க வைக்கிறது! ஆனால் திசை திருப்பி அணுசக்தியைக் கட்டுப்படுத்தி மனிதருக்கு ஆக்கசக்தி யாகவும் மாற்ற முடியும். உலகெங்கும் தற்போது நூற்றுக் கணக்கான அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி மின்சாரம் பரிமாறி வருகின்றன. பெரும்பான்மையான அணுசக்தி நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி வந்தாலும், தவிர்க்க முடியாத பயங்கர அணு உலை விபத்துகள் அமெரிக்காவின் திரிமைல் தீவு நிலையத்திலும், பழைய சோவித் ரஷ்யாவின் செர்நோபில் நிலையத் திலும், ஜப்பானில் புகுஷிமா அணுமின் உலைகளிலும் நேர்ந்து ஆயிரக் கணக்கான மக்கள் தீராத இன்னல்களில் இன்னும் வருந்தி வருகிறார்கள்.

அணுசக்தியின் மேற்கூறிய ஆக்க வினைகளையும், அணு ஆயுதங்களின் அழிவுத் தன்மையும் இந்த நூல் தயக்கமின்றி, தணிப்பின்றி, தடுப்பின்றி விளக்கமாய் எடுத்துக் காட்டுகிறது. சென்ற நூற்றாண்டில் ஐம்பது ஆண்டுகளாக அணுசக்தியை விருத்தி செய்த விஞ்ஞானிகளைப் பற்றிய விபரங்கள் உள்ளன. எக்ஸ்-ரே கண்டுபிடித்த ராஞ்சன் முதல், கதிரியக்கம் கண்டுபிடித்த மேரி கியூரி, ஐரீன் கியூரி, லிஸ் மைட்னர், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நீல்ஸ் போஹ்ர், எட்வெர்டு டெல்லர் மற்றும் அணுப்பிளவில் [Nuclear Fission] அணுக்கருத் தொடரியக்கம் உண்டாக்கிய என்ரிகோ ஃபெர்மி வரை அனைவரது வரலாறுகளும் அந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஆய்வுச் சோதனைகளில் முன்னேறிக் கொண்டிருக்கும் கதிரியக்க மில்லாத அணுப்பிணைவு [Nuclear Fusion] ஆராய்ச்சி பற்றியும் விபரங்களும் உள்ளன. உலக அணுமின் உலைகளைப் பற்றி மட்டுமின்றி பாரத அணுமின் நிலையங்களின் வெற்றிகரமான இயக்கங்களும், முன்னேற்றங்களும், அவற்றில் நிகழ்ந்த விபத்துகளும் கூறப் பட்டுள்ளன.

நாற்பத்தி ஒன்று அணுசக்திக் கட்டுரைகளை வாரந் தோறும் தளராது வலைப் பதிப்பில் பொறுமையாக வண்ணப் படங்களுடன் ஏற்றிய மதிப்புக்குரிய திண்ணை அதிபர்கள் ராஜாராம், துக்காராம் எனது பாராட்டுக்கும், நன்றிக்கும் உரியவர்கள். மேலும் நூலை வெளியிட என்னை ஊக்குவித்த மதிப்புக்குரிய நண்பர் ஜெயமோகனும், அவர் தூண்டிச் சிறப்பாக வெளியிட்ட தமிழினி பதிப்பகத்தின் அதிபர் வசந்த குமாரும் என் நன்றிக்கு உரியவர்கள்.

என்னைப் பற்றி :

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.

அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 500 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன.

எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.

அன்புடன்,
சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++

அணுசக்தி நூல் விலை : ரூ 270
(415 பக்கங்கள்)

நூல் கிடைக்குமிடம்
தமிழினி பதிப்பகம்
63. பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை,
சென்னை: 600014, தமிழ் நாடு
இந்தியா

    ************************

தமிழினி பதிப்பகம் அதிபர் வசந்த குமார்

ஈமெயில் : “vasantha kumar” tamizhininool@yahoo.co.in

செல் ஃபோன் : 98841-96552
ஆஃபீஸ் போன் : 2835-1410

நூல் வாங்க வசந்த குமாரிடம் நேராகத் தொலை பேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.

 

    +++++++++++++++++++

32 மறுமொழிகள் »

  1. 1
    ச.இராமசாமி சொல்கிறார்:

    தமிழ் மட்டுமே எளிதாகப்படித்துப் புரிந்து கொள்ளக்கூடிய எனக்கும், என்னைப் போன்றோருக்கும், தங்களின் படைப்புக்கள் பெரும் வரம்.
    அறிவியல் தமிழ்ப்பணி தொய்வின்றித் தொடரட்டும். தியாகராசன் கணேசர் M.Sc.(strathclyde);C.Chem.(Lon);FRSC (Lond)-எழுதிய அணுசக்தியின் கதை-ஹிரோஷிமா முதல் கல்பாக்கம் வரை. (1988) என்ற நூலும் நினைவுக்கு வருகின்றது.நன்றியுடன்.

  2. 4
    ARUMUGAM சொல்கிறார்:

    உங்கள் வலை பதிப்புகள் நல்ல பயன் உள்ளதாக உள்ளன, தாங்கள் தங்கள்
    படிப்பு சம்பந்தமாக வழி காட்டுதல் முறைகள் எழுத வேண்டும் என்று மிக தாழ்மயுடன்
    வேண்டுகிறன்

  3. 5
    Sivasayanth சொல்கிறார்:

    good work. what i expect long time.

  4. 6
    S. Jayabarathan சொல்கிறார்:

    பாராட்டுக்கு நன்றி நண்பர் சிவசயன்த்,

    நட்புடன்,
    சி. ஜெயபாரதன்

  5. 10
    Dr. Ganesan Ramanathan சொல்கிறார்:

    அணுசக்தியைப் பற்றி முதல் நூல் “அணுவைப்பற்றி” என்ற் தலைப்பில் 1968 ம் ஆண்டு மும்பையில் அமைச்சர் நெடுஞ்செழியன் அவர்களால் மும்பை தமிழ் சங்கத்தில் வெளியிடப்பட்டது. இந்த நூலில் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளான வெங்கட் ராஜ், நம்பி மற்றும் சிலரால் எழுதப்பட்டது.

    1996 ல் அணுசக்தி கலை மன்றத்தால் ” தேசிய மேம்பாட்டில் அணுசக்தியின் மகத்தான பங்கு” என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு எனது முயற்சியால் நடத்தப்பட்டது. உங்களது நூலை படிக்க முயற்சியால் நடத்தப்பட்டது. உங்களது நூலை படிக்க ஆவலாயுள்ளேன்.

  6. 11
    வளரும் பையன் சொல்கிறார்:

    தேடலில் வாழும் என் போன்றோருக்கு இது மிகவும் பயன் உள்ளது.
    ஆங்கிலத்தில் தான் இதுவரை படித்து அரைகுறையாக விளங்கிக்கொண்டேன் . இனி இதில் உள்ள சந்தேகம் தீரும் என நினைக்கிறேன் .

    நன்றி

    நன்றி

    நன்றி

  7. 13
    saravanan சொல்கிறார்:

    thangalin anu katturai padethen enakku ennum anuvai pattreya arvum
    athikariththathu mekka nanri

  8. 14
    Harrison Kirbie சொல்கிறார்:

    perfect book you secure

  9. 15
    Ross Westra சொல்கிறார்:

    stellar logbook you’ve enjoy

  10. 16
    Jeannette Gemme சொல்கிறார்:

    This blog seems to recieve a great deal of visitors. How do you promote it? It offers a nice individual spin on things. I guess having something useful or substantial to give info on is the most important thing.

  11. 17
    Les Borsari சொல்கிறார்:

    I’d be inclined to cut a deal with you on this. Which is not something I usually do! I enjoy reading a post that will make people think. Also, thanks for allowing me to comment!

  12. 18
    Shameka Bonanni சொல்கிறார்:

    Amazing! Your post has a bunch comment posts. How did you get all of these people to see your article I’m jealous! I’m still learning all about article writing on the net. I’m going to look around on your site to get a better idea how to achieve success. Thanks for the help!

  13. 19
    remote tank monitoring சொல்கிறார்:

    A great usefull blog – a big thanks I hope you dont mind me commenting about this post on my website I will also leave a linkback Thanks

  14. 20
    jmms சொல்கிறார்:

    கிட்டத்தட்ட 75வது வயதிலும் அயராது எழுதி சாதனை படைப்பதோடு ஒரு முன்னுதாரணமாகவும் தமிழர் ஜெயபாரதன் ஐயா..

    மிக்க மகிழ்ச்சியும் பெருமையும்,…

    மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா..

  15. 22
    பாலா சுவாமிநாதன் சொல்கிறார்:

    நாற்பத்தி ஒன்று அணுசக்திக் கட்டுரைகள்! அபாரம், இத்தனை அறிவியற் கட்டுரைகள் தமிழில் எழுதிய உங்கள் ஆக்கப் பணிக்கு என் வணக்கங்கள், ஐயா!

  16. 23
    S. Jayabarathan சொல்கிறார்:

    பாராட்டுக்கு நன்றி பாலா சுவாமிநாதன்.

    ஜெயபாரதன்.

    ++++++++++++

  17. [...] தமிழில் முதல் அணுசக்தி நூல் « நெஞ்சின… [...]

  18. 25
    fuel savings சொல்கிறார்:

    A truly informative post – Thank you very much I trust you do not mind me writing about this post on my website I will also leave a link back to this post Thanks

  19. 26
    candida colon cleanse சொல்கிறார்:

    A genuinely beneficial post – A big Thank You I trust you do not mind me blogging about this post on my blog I will also leave a link back to this post Thank you

  20. 27
    Nitrogen Ice Cream சொல்கிறார்:

    Great article, I’ve bookmarked this page and have a feeling I’ll be returning to it often.

  21. 28
    running elk சொல்கிறார்:

    Way cool, some valid points! I appreciate you creating this article available, the remainder website is also done well. Have a very great day

  22. 29
    Jeffery Petrino சொல்கிறார்:

    Alexa is much more of a customer reporting form of instrument, not SEO form software…many thanks for reading!

  23. 30
    Jadwiga Loch சொல்கிறார்:

    Wonderful write-up, give thanks to you, I should pay a visit to yet again now!

  24. 31
    parameswaran.c சொல்கிறார்:

    மரியாதைக்குரிய ஐயா,வணக்கம். தங்களது தமிழ்ப்பணி வாழ்க!வளர்க!!
    என் போன்ற ஓட்டுனர் பணி புரியும் கடைநிலை ஊழியரும் அணு அறிவியல் பற்றிய பல அரிய செய்திகள் அறிந்து கொள்ள தங்களைப் போன்ற மாமனிதர்களின் இது போன்ற பங்காற்றலால்தான் முடிகிறது. தங்களது பதிவுகள் தமிழுக்கு ஒரு வரப்பிரசாதம்..நன்றிகள் பல பல..paramesdriver.blogspot.com

  25. 32
    S. Jayabarathan சொல்கிறார்:

    நண்பர் பரமேஸ்வரன்,

    வணக்கம். உங்கள் வலைத் தளத்தில் பேரழிவுப் போராயுதங்களைப் பற்றித் தமிழில் பொதுநபருக்கு விளக்கி இருக்கும் விதம் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். எனது வலைத் தளத்தில் http://jayabarathan.wordpress.com/ அணுசக்தியைப் பற்றிப் பல கட்டுரைகள் உள்ளன. தேவையானவற்றை எடுத்தாளுங்கள்.

    பாராட்டுக்கு நன்றி.

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்.

    ++++++++++++


RSS Feed for this entry

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 82 other followers