Archive for நவம்பர், 2009

அணு ஆயுதப் புளுடோனியம் ஆக்கிய கெலென் ஸீபோர்க்

நவம்பர் 28, 2009

Glenn Seaborg
(1912-1999)
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

பூமண்டலத்தைச் சிதைத்துவிடப் போர்கள் மூண்டு விடுமா, அல்லது மனித இனத்தை உயர்நிலைக்கு மேம்படுத்த அமைதி நிலவி விடுமா என்று மாந்தருக்கு அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் உண்டாக்கும் ஒரு பெரும் இக்கட்டான நிலை நமது காலத்தின் தவிர்க்க முடியாத போக்காகும்!
கெலென் ஸீபோர்க்

நாகசாகில் போட்ட இரண்டாம் அமெரிக்க அணுகுண்டு!
1945 ஆகஸ்டு 9 ஆம் தேதி இரண்டாம் உலகப் போர் முடியும் தறுவாயில், ஜப்பான் நாகாசாகியின் மீது அமெரிக்கா [...]

வானலைத் தொடர்பு வல்லுநர் மார்க்கோனி

நவம்பர் 27, 2009

(1874-1937)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

கம்பியிலாத் தந்தி கண்டுபிடிப்பு
1895 ஆம் ஆண்டு ஜெர்மன் விஞ்ஞானி வில்ஹெம் ராஞ்சன் [Wilhelm C. Roentgen] ஊடுருவிச் செல்லும் எக்ஸ்ரே கதிர்களைக் [X-Rays] கண்டுபிடித்துத் தன் கையின் எலும்புக் கூட்டைப் படமெடுத்துக் காட்டி ஓர் அற்புதம் செய்தார். ஓராண்டு கழிந்து இத்தாலிய மேதை மார்க்கோனி, பல மைல் தூரம் மாயமாய் ஊடுருவிப் பாயும் ‘விண்ணலைத் தொலைவரைவு ‘ [Wireless Telegraph] என்னும் ‘கம்பியிலாத் தந்தியை ‘ அனுப்பித் தொடர்பு [...]

பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! பூர்வீக விண்மீன்கள், புதிரான கரு விண்மீன்கள்

நவம்பர் 26, 2009

(கட்டுரை: 66)
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

பிரபஞ்சப் பெரு வெடிப்பில்
பொரித்த முதல் விண்மீன்களில்
கரு விண்மீன்
ஒருவிதப் பூர்வீக விண்மீன் !
பரிதி விண்மீன் போல்
ஒரு யுகத்தில்
ஒளிவீசிக்
கரு விண்மீனாய்க்
காணாமல் போனவை !
அசுர வடிவம் கொண்ட
அபூர்வ விண்மீன்கள் !
ஆயினும் திணிவு மிக்கவை !
நியூட்ரான் விண்மீன்கள்
நிறை பெருத்தாலும்
உருவம் சிறியவை ! ஆனால்
பிரியான் விண்மீன்கள்
திணிவு பெருத்த
நுணுக்க விண்மீன்கள்
அசுரத் திணிவும், அபார நிறையும்
கணிக்க முடியாது !
கரும்பிண்டத்தின் களஞ்சியம் !
இறுதியில்
கருந்துளை யாக மாறிடும்
கரு விண்மீன்
கண்ணுக்குத் தெரியாது !
கருஞ்சக்தி, கருந்துளை, கரும்பிண்டம்
கரு விண்மீன் –
பிரபஞ்சப் படைப்புகள் பல
கண்ணுக்குப் புலப்படா
கடவுளைப் [...]

விண்வெளி ஏவுகணை தாக்கி வெண்ணிலவு இருட்குழியில் தண்ணீர் இருப்பதை நாசா உறுதிப் படுத்தியது !

நவம்பர் 20, 2009

(கட்டுரை : 6)
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

வெண்ணிலவின் தென் துருவத்தில்
தண்ணீர் கண்டுபிடித்தார்
நாசா நிபுணர்
ஏவு கணையால்
நிரந்தர
நிழற் குழியைத் தாக்கி !
பனிக்கட்டிப் பாறையாய்
பல யுகங்கள்
பதுங்கிக் கிடக்கும்
புதுமை ! பழமை ! மகிமை !
எரிசக்தி உண்டாக்கும்
அரிய வாயு
ஹைடிரஜன்
வெடிப்பில் வெளியேறும் !
செவ்வாய்க் கோளுக்குச் செல்லும்
பயணிகட்குத்
தங்குமிடம் அமைக்க
வெண்ணிலவில் குளிர்ந்த
தண்ணீர் வசதி !
பிராண வாயு சுவாசிக்க !
எரிசக்தி வாயு !
வரண்டு போன
பாலைவனச் சுடு நிலவில்
பசுஞ் சோலைப் பள்ளத்தில்
நீர்க்கட்டி
நிரந்தரமான தெப்படி ?
இருண்டு போன
ஆழ்குழியில்
பனிநீரைத் திரவ மாக்கி
மேற்தளத்தில்
ஏற்றுவது எப்படி ?

“நிலாவில் நீர் இருப்பது உறுதி செய்யப் [...]

இந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc.

நவம்பர் 12, 2009

சி. ஜெயபாரதன், B.E.(Hons),P.Eng (Nuclear), Canada

“2001 ஆம் ஆண்டில் ஹைதிராபாத் டாடா அடிப்படை ஆராய்ச்சி ஆய்வகத்தில் (TIFR –Tata Institute of Fundamental Research) நாங்கள் 24 மைல் உயரத்தில் ஏவிய பலூனில் வாழும் உயிரின மூலவிகள் காணப் பட்டன !  அவை எப்படி அந்த உயரத்தில் தெரிந்தன என்பதை விளக்குவது கடினம்.  எரிமலைச் சாம்பல் தூசிகூட 15 மைல் உயரத்தைத் தாண்டிச் செல்லாது !  அவை சில வாரங்கள்தான் அங்கு நிலைத்து உலவக் கூடும்.  நாங்கள் [...]

உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரத்தில் மீண்டும் சோதனை துவங்குகிறது !

நவம்பர் 5, 2009

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

பூத விரைவாக்கி யந்திரம்
மீண்டும் உயிர்த் தெழுந்தது !
மோத வைத்து உடைக்கும்
புரட்டானை !
கரு வெடிப்பில்
உருவாக்கப் போகிறது
கடவுள் துகளை !
பிரபஞ்சப் பெருவெடிப்புக் காட்சி
ஆய்வ கத்தில்
அரங்கேற்றம் !
கருந்துளை உண்டாக்கி நமது
காசினியை விழுங்காது !
சிகாகோவில் ஃபெர்மி முதலாய்ச்
செய்து வைத்த
அணுப்பிளவுத் தொடரியக்க
ஆய்வு போன்றது !
பரமாணுவுக் குள்ளேயும்
கரகமாடிச் சுற்று மோர்
நுட்ப அகிலம் !
பராமணுக்கள் முட்டை யிட்டுக்
குஞ்சுகள் பொறிக்கும்
கோடான கோடி
குளுவான்கள் ! குவார்க்குகள் !
லிப்டான்கள் !
ஃபெர்மி யான்கள் !
இதுவரை யூகித்திருந்த
கடவுள் துகள்
நுட்பமான ஹிக்ஸ் போஸானை
சுட்டுப் படைத்திடுமா
வட்ட விரைவாக்கி
யந்திரம் ?
+++++++

மனித இனம் [...]

சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது

நவம்பர் 2, 2009

வைகைச் செல்வி
வனம்பாடி, வானம்பாடி, வனராணி
சி. ஜெயபாரதன், கனடா
இது நமது பூமி!
இது நமது வானம்!
இது நமது நீர்வளம்!
முப்பெரும் சூழ் வளத்தையும்
துப்புரவு செய்வது,
நமது பணி!
இவ்விதம் பறைசாற்றித் தமிழகத்தின் செவியெல்லாம் இராப் பகலாய் முழக்கம் செய்து வருபவர், வைகைச் செல்வி. ஊழியப் பணிபுரியும் பெண்டிரை ஆணாதிக்கப் பரம்பரை பாலியல் சீண்டல்களால் பேரின்னல் கொடுத்து, மன வேதனை தரும் கொடுமைகளைப் பாரதக் கலாச்சாரக் கூட்டங்களில் முரசடித்து வருபவர், வைகைச் செல்வி. தொழிலகங்களில் ஊழியம் புரியும் மாதர்களின் தொழில்மூலம் ஏற்படும் உடல்நலச் சீர்கேடுகளை உலகப் [...]