
சி. ஜெயபாரதன், கனடா
அற்றைத் திங்கள்
அவ்வெண் ணிலவில்
முற்றுப் பெறா தேனாற்றில்
முத்தெடுத்தோம் !
சுற்றி வந்தோம்
சொர்க்கப் படகில் !
வசந்த காலம் !
வளர்பிறைக் கோலம் !
கட்டினோம் நீள் பாலம்
கடல் அலை மீது !
எமக்குள் இருந்த
ஒற்றுமை வேர்களைப்
பற்றிக் கொண்டு
பழங்கதை பேசினோம் !
பாடினோம் ! ஆடினோம் !
படமெடுத்து நெஞ்சில் சூடினோம் !
விடியும் வரை
கனாக் கண்டோம் தோழி !
மண்ணில் கால் படாது,
விண்ணில் பறந்தோம் !
தாகம் மிகுந்து
மோகக் கடலில் மூழ்கினோம்!
சிப்பிக்குள் முத்துண் டானது !
ஒப்புடன்
விதியின் ஆசியால் முடிந்ததெம்,
அதிசயத் திருமணம்!
தேனிலவில் குளித்து,
சொர்க்க புரிச் சிகரத்தைத்
தொட்டுக் கீழே
இறங்கும் போது
தர்க்க புரியில்
தடம் வைத்தோம் !
முழு நிலவின் பொன்னலைகள்
பழுதாக்கின
உழுது எம் நெஞ்சை !
நேற்று மறந்த
வேற்றுமை விழுதெல்லாம்
காற்றில் தாக்கின
முறிந்தது பாலம் !
சேயிழைக்குக் காயம் !
நாயக னுக்கும் காயம் !
தேய்பிறைக் கோலம் !
இற்றைத் திங்கள்
இவ்வெண் ணிலவில்
முற்றுப் புள்ளி உதயம் !
அத்த மிக்கும் வானில்
தொத்தி எழும்
கரு நிலவு !
++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) February 25, 2010 ( R-3)
talented blog you latch on to
Couldn?t be published any better. Reading this post reminds me of my old room mate! He always kept talking about this. I will forward this report to him. Pretty positive he will have a great read. Thanks for sharing!
Wow! Your post has quite a few comments. How did you get so many people to view your post I’m envious! I’m still learning all about blogs on the net. I’m going to look around on your site to get a better understanding how to get more visable. Thanks for the help!
Super-Duper internet site! I’m loving it!! Will come again again – taking you feeds also, Thanks.
Hello. Good position. I did not anticipate this on the Wednesday. This is a good story. Thanks!