காம சக்தி

kama-sakthi

சி. ஜெயபாரதன், கனடா


பூக்கும் மலரில் பொங்கும் தேனது !
ஆக்கும் சக்தி ! ஆத்மாவின் சிறகு !
அளவில் மிஞ்சின் அழிக்கும் சக்தி !
கவரும் சக்தி காந்தம் போல !
துருவம் இரண்டு ஆண்மை, பெண்மை !
ஆண்மை பாதி ! பெண்மை மீதி !
ஆண்பால் இன்றேல் பெண்பால் தேயும் !
பெண்பால் இன்றேல் ஆண்பால் மாயும் !

வயிறுக்கு உணவு ! உடலுக்கு உறவு !
ஈரினம் இணைந்து பூரணம் அடைவது
மனித நியதி ! மானிட வளர்ச்சி !
காமம் உடற்கு கவின்தர வல்லது !
மேனி மினுக்கும், மீன்விழி ஒளிர்க்கும்,
முகக்களை ஈர்க்கும், மூளை தளிர்க்கும்,
காமக் கதிர்ஒளி பூமழை பெய்தால் !

பைரன், பாரதி, ஷெல்லி, ஷேக்ஸ்பியர்
பாரதி தாசன், கண்ண தாசன்,
வள்ளுவர், வால்மிகி, வியாச முனிவர்
பாடகி மீரா, லதாமங் கேஷ்கர்,
ஆடகி மேனகை, மாதவி, ஊர்வசி,
வைஜயந்தி மாலா, கமலா, பத்மினி,
காளிதாஸ், கம்பன், கவிக்குயில் ஆண்டாள்,
காமக் கடலில் நீந்தாக் கலைஞர்
பூமியில் ஏது ? காம சுரப்பிகள்
கலைத்துவ வேர்,உரம், நீரும் ஆகும் !

காம மிகுதி கலைசெயத் தகுதி !
காம சக்தியைக் கட்டுப் படுத்தி,
காவியம் படைப்போர் காலனை வெல்பவர் !
ஓவியம் தீட்டுவோர் உயர்தனி மனிதர் !
நாடகம், நாட்டியம், மேடையில் படைப்போர்,
சிற்பம் செதுக்கும் அற்புதச் சிற்பி,
ஆய்வுகள் புரிவோர், அறிவியல் ஞானி !
நுண்கலை வடிப்போர் மண்புகழ் பெறுவர் !

வறுமையும் நோயும் சுரப்பியின் நஞ்சு !
காமம் மீறுதல் தீமையின் விதைகள் !
பாமர மூடன் காமச் சுரப்பியைக்
காலால் நசுக்கிக் கவினை அழிப்பான் !
காம சுரப்பிகள் காய்ந்து போனால்
அகஒளி மாயும் ! முகஎழில் தேயும் !
முதுமையின் கருநிழல் முழுஉடற் பாயும் !
காவியம், கலைகள், ஓவியம் ஏது ?
நுண்கலை யாவும் கண்களை மூடும் !
நடனம் ஏது ? நல்லிசை ஏது ?
முடமாய்ப் போகும் நடமிடும் ஆத்மா !

*********************
S. Jayabarathan [(jayabarat@tnt21.com) November 10, 2008 (R-2)]

18 மறுமொழிகள் »

  1. 1
    Kannan சொல்கிறார்:

    உண்மைக் கவிதை-கவிதையில் சத்தியம். இந்த உண்ம புரிந்துவிட்டால் சிக்கலே இல்லையே. இது புரியாததும், புரிந்து கொள்ள மறுப்பதும், புரிந்ததுபோல் நடிப்பதும் மேலும் இதை சந்தைப் பொருளாக்குவதுமே இன்றயப் பிரச்சனை.

    கண்ணன்.

  2. 2
    K.Kannapiran சொல்கிறார்:

    I can say one thing about this poem. Only a person who knows and enjoys reading Tamil can understand the silky smoothness of this masterpiece. Like Kannadasan, Jeyabarathan’s verses flow like a stream.

    I really enjoyed reading and re-reading these lines again and again just to feel the smoothness and depth. I am amazed to find that an astro-physicist like Mr. Jeyabarathan found time to pen the poem in his native tongue Tamil. As a Tamizhan I congratulate thiru. Jeyabarathan.

  3. 3
    Jayabarathan S சொல்கிறார்:

    Dear Kannapiran,

    Thanks for your greetings. If one decides to write in Tamil or in English & enjoys the art of creative writing, one voluntarily learns the creative process in all forms of art : Poetry, Paintings, Drama, Articles, Story and Science. Each form of art has its own uniqueness, expressive merit & limit.

    Where do you live & work ? Please tell me about yourself.

    With Kind Regards,
    S. Jayabarathan.

  4. 4
    yogiyaar சொல்கிறார்:

    ரொம்ப அழகான கவிதை..அகவல் நடை. கருத்தும் உண்மையும்
    கலவிபோல் கைகோத்துச் செல்கின்றன…கவிஞர் எந்தன், உந்தன்..எனும் சொற்களைத்தவிர்த்து என்றன், உன்றன் எனப் பயன்படுத்த்வேணும்.(இது என் வேண்டுகோள்).தமிழுக்கு அதுவே அழகு.,யாரோ கட்சிக்காரங்க உந்தன் என்று சொல்லப்போக அது எப்படிச்சீரழிக்கிறது தமிழை..பாரீர்!,
    யோகியார் வேதம்

  5. காமம் மீறுதல் தீமையின் விதைகள்

    பாராட்ட வார்த்தைகள் இல்லை. நன்றி சிவா

  6. 6
    Selvendran சொல்கிறார்:

    அணுவை பிளந்தால் அருபெரும் சக்தி
    காமம் உணர்ந்தால் அதுபெரும் சக்தி..
    விளக்கத் தயங்கும் விசயமிது
    விளங்கி விட்டால் வசியமது

    கவிதைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி…

    அன்புடன்,
    செல்வேந்திரன்

  7. 8
    Omer Delamater சொல்கிறார்:

    This domain seems to get a large ammount of visitors. How do you get traffic to it? It offers a nice unique spin on things. I guess having something real or substantial to give info on is the most important factor.

  8. 9
    Zane Howton சொல்கிறார்:

    This page appears to get a large ammount of visitors. How do you advertise it? It gives a nice unique spin on things. I guess having something authentic or substantial to say is the most important thing.

  9. 10
    Hung Deruyter சொல்கிறார்:

    I’d come to concur with you one this subject. Which is not something I typically do! I really like reading a post that will make people think. Also, thanks for allowing me to comment!

  10. 11
    xtreme fat loss diet சொல்கிறார்:

    who I am thankful to find this website through Google.

  11. 12
    auto rijschool சொல்கிறார்:

    I just now added your blog to my favorites. I like analyzing your articles.

  12. 13
    Billye Ryans சொல்கிறார்:

    Incredible! Your blog has quite a few readers. How did you get all of these bloggers to view your blog I’m very jealous! I’m still learning all about blogs on the internet. I’m going to view pages on your website to get a better idea how to attract more people. Thank you!

  13. 14
    remote tank monitoring சொல்கிறார்:

    A really helpfull post – big thanks I i really hope you do not mind me blogging about this article on my site I will definately leave a link back Thank you

  14. 15
    COMPAL ELECTRONICS சொல்கிறார்:

    I would like to thnkx for the efforts you have put in writing this site. I am hoping the same high-grade web site post from you in the upcoming as well. Actually your creative writing skills has inspired me to get my own website now. Really the blogging is spreading its wings fast. Your write up is a great example of it.

  15. 16
    S. Jayabarathan சொல்கிறார்:

    Thanks for the great compliments.

    Regards,
    Jayabarathan

  16. 17
    Bessie Willwerth சொல்கிறார்:

    i couldn;t agree a lot more with the school thesis statement! also, blogs which are written enjoy a rocket research blueprint can flip audience away fast. They may standing for certain keywords and phrases, but in the lengthy run no one should read it!

  17. 18
    Dierdre Kuca சொல்கிறார்:

    Howdy there, are you possessing difficulties with all the hosting? I required to refresh the web page about huge quantity of occasions to be able to get the web page to run!


RSS Feed for this entry

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 82 other followers